கோட்டமங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் திமுக ஊராட்சி மன்ற தலைவருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சட்டத்திற்கு புறம்பாக அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் முறையாக அகற்றப்படும் என்பன உட்பட 22 தீர்மானங்கள் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கோட்டமங்கலம் ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் தலைமையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



அப்போது ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பு வழங்கி இருப்பது மற்றும் தெருவிளக்கு பராமரிப்பதில் அலட்சியம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேட்டில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக கூறி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும் கிராம சபை கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 100 பேர் இருக்க வேண்டிய நிலையில் குறைந்த அளவு பொதுமக்களை வைத்து கிராமசபை கூட்டத்தை நடத்தக்கூடாது என பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இறுதியாக சட்டத்திற்கு புறம்பாக அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் முறையாக அகற்றப்படும் என்பன உட்பட 22 தீர்மானங்கள் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கிராம சபை கூட்டத்தில் குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...