விஜயதாரணியின் உழைப்பு மற்றும் திறமைக்கு பாஜக அங்கீகாரம் தரும்-கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி

மக்கள் பிரதிநிதிகள் எதற்காக கட்சியில் இணைந்தோம் என அவர்களே கூறி விட்டார்கள். மக்கள் பிரதிநிகளை இழுத்து வர முடியுமா?. அவர்களே முடிவு செய்யாமல் பாஜகவினர் இழுத்து வர முடியுமா? என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.


கோவை: அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் வடகோவை இரயில் நிலையம் உட்பட இந்தியாவில் 554 இரயில் நிலையங்கள் மறு சீரமைக்கும் பணியை பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் இரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தநிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் பேசியாதவது, ஐ எஸ் ஓ சான்றிதழ் தொடர்பாக பல விமர்சனங்கள் வருகிறது.

எந்த நிறுவனம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்குவதற்கு தகுதியானது என நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த நிறுவனத்தை எனது அலுவலகத்திற்கு அனுப்புங்கள். பாஜகவில் இணைபவர்கள் அனைவரும் எங்கள் கட்சியில் கொள்கையை பிடித்து, புதிதாக வருபவர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்குகிறது என்பதை பார்த்து, பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பார்த்து இந்தக் கட்சி நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது என்ற உன்னதமான உணர்வோடு வருகிறார்கள். பாஜகவில் இணைவதை பார்த்து பொறுக்க முடியாதவர்கள் சொல்வதுதான், இவ்வாறு பணம் நடக்கிறது. இல்லை வேறு ஏதாவது பேரம் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.



மக்கள் பிரதிநிதிகள் எதற்காக கட்சியில் இணைந்தோம் என அவர்களே கூறி விட்டார்கள். மக்கள் பிரதிநிகளை இழுத்து வர முடியுமா? அவர்களே முடிவு செய்யாமல் பாஜகவினர் இழுத்து வர முடியுமா? வீட்டில் இருக்கும் குழந்தைகளை கூட இழுத்து வர முடியாது.

மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த நேரத்தில் பாஜகவில் இணைந்தால் சரியாக இருக்கும் என தோன்றுகிறது. ஏனென்றால் அவர்கள் இருக்கும் கட்சி அவர்களுக்கு சரியில்லை. அடுத்து வருவதும் பாஜக ஆட்சி தான் என மிக உறுதியாக தெரிகிறது. இவர்களோடு இணைந்தால்தான் அரசியல் லட்சியங்களை நிறைவேற்ற முடியும் என்பதை உணர்ந்து இருக்கிறார்கள்.

வாய்ப்புகள் கொடுக்கும் இடம், அடுத்த கட்ட வருங்காலம் இருக்கும் இடம் பாஜக தான். விஜயதாரணி இன்றைய தேதியில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இடர்பாடுகளை கூறி இருக்கிறார். அவரின் உழைப்பு ,திறமை ஆகியவற்றிற்கான அங்கீகாரம் பாஜக தரும்.

மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தங்களது கடமைகளை அந்த இடத்தில் சரியாக செய்ய முடியவில்லை என்ற மன அழுத்தத்தின் காரணமாக அல்லது பிரச்சினைகளின் காரணமாக கூட வரலாம் அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

எங்களை எதிர்த்துப் பேசுபவர்கள் நாட்டுக்காக வேலை செய்ய பாஜகவில் இருந்தால் வாருங்கள் என்று தான் கூறுவோம்.

எனது விருப்பமோ விருப்பமின்மை குறித்தோ பேசுவதற்கு கட்சிகள் ஒரு இடத்தை கொடுத்திருக்கிறார்கள் அந்த இடத்தில் கூறுவேன். கோவையில் வானதி போட்டியிடுவதாக விருப்பம் தெரிவித்திருக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்கிறது.

மதுரை எய்ம்ஸ் குறித்து பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் பலமுறை பதில் கூறி விட்டார்கள். திரும்பத் திரும்ப எய்ம்ஸ் எய்ம்ஸ் என்றால், ஒற்றை செங்கலை வைத்து சுற்றுகிறீர்களே. ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிறது ஏன் நடத்தலை. இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார்.

Newsletter

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...