கோவையில் சவப்பெட்டியுடன் மனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது என்பவரால் பரபரப்பு

ஏற்கனவே 41 முறை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், தற்பொழுது 42 வது முறையாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளதாகவும் சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது தெரிவித்தார்.



கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது என்பவர் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு "ஜனநாயகம் இறந்து விட்டது" என குறிப்பிடும் வகையில் சவப்பெட்டியுடன் மனுத்தாக்கல் செய்ய வருகை புரிந்திருந்தார்.

அவரை 200 மீட்டருக்கு முன்பு தடுத்து நிறுத்திய போலீசார் சவப்பெட்டியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அவரை மட்டும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வருமாறு அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்மாவில் ஈடுபட்டார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நூர் முகமது, 1996-ம் ஆண்டு முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருவதாகவும் 97-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.

மேலும் மாமன்ற உறுப்பினர் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஜனநாயக முறைப்படி யாரும் இல்லை, ஜனநாயகத்தில் மக்கள் ஓட்டு போடுவதற்கு பணம் பெற்று தான் ஓட்டு போடுகிறார்கள் என்று கூறினார்.



மேலும் ஏற்கனவே 41 முறை வேட்பு மனு தாக்கல் செய்து விட்டதாகவும், தற்பொழுது 42-வது முறையாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.

ஜனநாயகம் இறந்துவிட்டது என்ன வலியுறுத்தி சவப்பெட்டி கொண்டு வந்த போது காவல்துறையினர் அதனை மடக்கி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...