முண்டந்துறை ஆறு தடுப்பணையில் குளிக்கச் சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தடுப்பணையில் குளிக்கச் சென்ற நான்கு மாணவர்களில் நீச்சல் தெரியாமல் பிரவீன், கவின், தக்க்ஷன் ஆகிய 3 பேர் நீரில் மூழ்கி இறந்து உள்ளனர். மாணவர்களின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள முண்டந்துறை ஆறு தடுப்பணையில் குளிப்பதற்காக பேரூர் அருகே உள்ள தீத்திபாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பிரவீன்(17), கவின்(16), தக்க்ஷன்(17) மற்றும் சஞ்சய்(21) ஆகிய 4 பேரும் இன்று ஏப்ரல்.24 சென்று குளித்து உள்ளனர்.



40 அடி ஆழம் உள்ள தடுப்பணையில் தற்போது 15 அடி நீர் உள்ளது. இதில் நீச்சல் தெரியாமல் பிரவீன், கவின், தக்க்ஷன் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி இறந்து உள்ளனர். இது குறித்து காருண்யா நகர் காவல் துறை மற்றும் தீயணைப்பு, மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் 3 பேரின் உடல்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காருண்யா நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...