கோவையில் மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஏற்பாடு

கோவையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி இணைந்து மாணவர்களுக்கான கவிதை, பேச்சு, ஓவியம் மற்றும் ஒராள் நாடகப் போட்டிகளை நடத்தின. பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



கோவை: கோவையில் மாணவ, மாணவிகளின் இலக்கியத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் கவிதை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.



இந்த நிகழ்வில் கவிதை, ஓவியம், பேச்சு ஆகிய போட்டிகளுடன், மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒராள் நாடகமும் நடத்தப்பட்டது. கவிதைப் போட்டியில் "மெல்லத்தமிழ் இனி?", "இன்ஸ்டா அடிமைகள்", "இயற்கை பேரிடர்கள் படிப்பினை என்ன?", "சமத்துவமும் சமூக நீதியும்" போன்ற தலைப்புகள் வழங்கப்பட்டன.

பேச்சுப் போட்டியில் "பழங்குடி மனித குலத்தின் மூத்த குடி", "நம் கல்வி நம் உரிமை எல்லோரும் சமம்தானே டீச்சர்" போன்ற தலைப்புகள் இடம்பெற்றன.



தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி இந்தப் போட்டிகளைத் துவக்கி வைத்தார்.

பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் தனித்தனி அரங்குகளில் நடைபெற்ற போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



குறிப்பாக ஒராள் நாடகப் பிரிவில், மாணவர்கள் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை தத்ரூப நாடகங்களாக நடித்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இந்த இலக்கியப் போட்டிகள் இளம் தலைமுறை மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணர்வதோடு, சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...