“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ளிட்ட ஆதரவு முழக்கங்களை எழுப்பிய அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.


கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக கோவை வந்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது நிகழ்வுகளை முடித்துக்கொண்டு கோவை விமான நிலையம் வழியாக சென்னை புறப்பட்டார்.



இதையொட்டி, அவரை வழியனுப்புவதற்காக அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கோவை விமான நிலையம் முன்பாக திரண்டிருந்தனர்.



எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பாகவே, அங்கு காத்திருந்த தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். குறிப்பாக, “காசுக்கு விலை போக மாட்டோம்”, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி”, “வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி” என ஆதரவு முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்து, ஆதரவு முழக்கங்களுடன் சென்னைக்கு வழியனுப்பினர்.

தொண்டர்கள் திரளாக குவிந்ததாலும், தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டதாலும், கோவை விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...