கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் செப்டம்பர் 24, 2026 அன்று நேரில் பார்வையிட்டார். வடவள்ளி முல்லை நகரில் ரூ.40 இலட்சத்தில் மழைநீர் வடிகால் பணி, கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாக பணி, ரூ.157 கோடியில் நகர்ப்புற நல்வாழ்வு மைய பணி, வீரகேரளம் சிறுவாணி சாலையில் பாதாள சாக்கடை பணி மற்றும் மகளிர் பூங்கா ஆகியவற்றை அவர் ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
Coimbatore: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ரூ.11.87 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் செப்டம்பர் 24, 2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வார்டு எண்.36-க்கு உட்பட்ட வடவள்ளி, முல்லை நகர் பகுதியில், மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, மேயர், வார்டு எண்.33-க்குட்பட்ட கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான (பாரா ஒலிம்பிக்) விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் உள்விளையாட்டு வளாக கட்டுமானப் பணியையும், அதே பகுதியில் 15வது மத்திய நிதிக்குழு (CFC) திட்டத்தின் கீழ் ரூ.157 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற நல்வாழ்வு மைய கட்டுமானப் பணியையும் நேரில் பார்வையிட்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு பணிகளை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மேலும், மேயர், கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் அமைந்துள்ள முதல்வர் படைப்பகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அங்குள்ள வருகை பதிவேடுகளை பார்வையிட்டார். அப்பகுதியில் உள்ள மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, காலை நேரத்தில் முன்கூட்டியே திறந்து இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேயர் அறிவுறுத்தினார்.

இதற்கு முன்னதாக, மேயர், வார்டு எண்.40-க்கு உட்பட்ட வீரகேரளம், சிறுவாணி பிரதான சாலை பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும், வீரகேரளம் மகளிர் பூங்காவினையும் நேரில் பார்வையிட்டு, பூங்காவை நன்றாக பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது, மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் நர்மதா, செயற்பொறியாளர் ஜெகன், உதவி செயற்பொறியாளர் சவிதா, மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் விமலா, சுபஸ்ரீ, கார்த்திகேயன்(பொ), சுகாதார ஆய்வாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.