வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான் முன்பதிவுகள் ஆரம்பம்

கோவை மாரத்தான் நிகழ்வின் 5-வது பதிப்பு நடைபெறவிருப்பதை கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் இன்று அறிவித்தது. இந்நிகழ்வின் டைட்டில் ஸ்பான்சராக வோடஃபோன் மற்றும் பவர்டு பை ஸ்பான்சராக எல்ஜி எக்விப்மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இடம்பெறுகின்றன. இதுவரை நடத்தப்பட்ட முந்தைய 4 பதிப்புகளைவிட மிகப்பெரியதாக நடத்தப்படவிருக்கும் இந்த ஆண்டின் மாரத்தான் 2017 அக்டோபர் 1ம் தேதி நடைபெறுகிறது.

"பெருமைகொள்ளுங்கள்" என்ற கருப்பொருளை தாங்கிய இந்த முதன்மையான ஓட்ட நிகழ்வானது, 15000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்கேற்பாளர்களுள் நாடெங்கிலும் இருந்து விளையாட்டு வீரர்கள், கார்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் ஓடுவதில் ஆர்வமுள்ள நபர்கள் என பலரும் இடம்பெறுகின்றனர்.

வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான் 2017 நிகழ்வில் பங்கேற்பதற்கான முன்பதிவுகள் இப்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. பதிவு செயல்முறைகளை www.coimbatoremarathon.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த மாரத்தான் போட்டியில் அரை மாரத்தான் (21.1 கி.மீ), 10 கி.மீ. ஓட்டம் மற்றும் 5 கி.மீ. ஓட்டம் மற்றும் நடை ஆகிய வகையினங்களை உள்ளடக்கியதாகும். அரை மாரத்தான் மற்றும் 10 கிமீ ஓட்டத்திற்கான பதிவுக்கட்டணம் ரூ.800 ஆகும். 5 கிமீ ஓட்டம் மற்றும் நடைக்கான பதிவுக்கட்டணம் ரூ.550 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செல்லத்தக்க மாணவர் அடையாள அட்டையை சமர்ப்பித்து இக்கட்டணத்தில் ரூ.100 தள்ளுபடியை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

2.7 லட்சம் என்ற மொத்த பரிசுத்தொகையானது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியான வகையினங்களில் வெற்றிபெறும் நபர்களுக்கு வழங்கப்படும். 21.1 கிமீ தூரம் கொண்ட பாதி மாரத்தான் ஓட்டத்தில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெறுபவர்களுக்கு இந்த பரிசுத் தொகையானது முறையே ரூ.25,000, 15,000 மற்றும் 10,000 வழங்கப்படும். 

10 கிமீ திறந்தநிலை வகையினத்தில் வெற்றிபெறும் முதல் மூன்று வீரர்களுக்கான பரிசுத்தொகை முறையே ரூ.15,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 வழங்கப்படும். 

மேலும், பல்வேறு பிரிவுகளாக நடைபெறவுள்ள இந்த மாரத்தான் போட்டியின் போது பரிசுகளும், பதங்கங்களும் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து மேலும் தகவலுக்கு 918939801188 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...