கோவை விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்- பயணி கைது

மின்சாரக் கருவியின் உள்ளே நூதனமுறையில் எடுத்து வரப்பட்ட தங்கத்தினை கோவை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கபூர். இவர் குவைத்தில் இருந்து ஷார்ஜா வழியாக ஏர் அரேபியா விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அப்போது விமான பயணிகளிடம் பரிசோதனை மேற்கொண்டிருந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அப்துல் கபூரை சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் கொண்டு வந்த மின்சாரக் கருவியில் சுமார் 30 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ அளவிலான தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனைத்தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தங்கத்தினை கடத்தி வந்த அப்துல் கபூரை கைது செய்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...