தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் வண்டல் மண் எடுக்கும் பணியினை அமைச்சர் துவக்கிவைத்து ஆய்வு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெம்பனூர், வண்டிக்காரனூர் ஆகிய கிராமங்களில் உள்ள குளங்களை தூர் வாரி விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.



கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெம்பனூர் ஆலாங்குட்டை, கெம்பனூர் ஊர்குட்டை, வண்டிகாரனூர் துப்பிக்கரன்குட்டை ஆகிய குளங்களை இன்று தூர் வாரி விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், இன்று தூர்வரப்படும் இம்மூன்று குளத்தின் ஆழம் சராசரியாக 32 மீட்டர் பரப்பளவு 5 ஹெக்டர் ஆகும். இக்குளத்தில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று எடுத்துக்கொள்ளலாம். விவசாயிகள் வண்டல் மண்ணை உபயோகிப்பதால் இயற்கையாக உரமாகவும் வண்டல் மண் திகழ்கிறது. குளங்களில் வண்டல் மண் எடுப்பதால் குளம் ஆழப்படுத்தப்பட்டு நிலத்தடி நீர் அதிகரிக்க ஏதுவாக உள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ், பொதுபணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...