இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் சதாம் உசேனை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி


இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சதாம் உசேனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கோவை சுப்ரமணியம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் கொலையாளிகளுக்கு உதவியதாக அபுதாஹிர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி கருமத்தம்பட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சதாம் உசேனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் கோவை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மதுரசேகரன் சதாம் உசேனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் காவலின் போது 2 நாட்கள் சதாமை அவரது வழக்கறிஞர் சந்தித்து பேசவும் அனுமதி அளித்து உத்தரவிட்டார். 

இது குறித்து பேசிய சதாம் தரப்பு வழக்கறிஞர் ப.ப.மோகன், இவ்வழக்கு ஜோடிக்கப்பட்டது எனவும் விசாரணை தேவையில்லை என தங்கள் தரப்பில் வாதிட்டதாகவும், இருப்பினும் விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து சதாமை போலீசார் தனியிடத்தில் வைத்து விசாரிக்க பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...