"நதிகளை மீட்போம்" மாபெரும் விழிப்புணர்வு பயணம் - நாளை (செப்.3) கோவையில் தொடங்கும் பேரணியில் சேவாக், மிதாலிராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு


"நதிகளை மீட்போம்" இயக்கத்தின் தேசிய அளவிலான மாபெரும் விழிப்புணர்வு பேரணி நாளை (செப்.3) கோவையில் துவங்க உள்ளது. வேகமாக வற்றி வரும் நம் தேசத்து நதிகளை மீட்க, அவற்றின் அடிப்படை நீரோட்டத்தை அதிகரிக்க வரையறை வகுத்து, மீண்டும் பெருக்கெடுத்து ஓடச் செய்ய, 'நதிகளை மீட்போம்'  என்னும் விழிப்புணர்வு இயக்கம் உருவாகி வருகிறது.

இது பற்றிய விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி, கோவையில் நாளை (செப்.3) வ.உ.சி. மைதானத்தில் மாலை 4 மணிக்கு துவங்க உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ள இந்த பேரணி கூட்டத்தில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு, பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங்பத்நோர், புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கே.ராமசாமி, இந்திய கிரிக்கெட் கேப்டன் மித்தாலிராஜ், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், மஹிந்திரா குழுமத்தின் மூத்த துணை இயக்குநர் விஜய்ராம் நக்ரா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்த விழிப்புணர்வு பயணத்தின் போது, கோலாகலமான இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் என பலதரப்பினரும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...