ஆர்எஸ்.புரம் சாலையில் வேருடன் விழுந்த ராட்சத மரம்

கோவையில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று அதிகாலை முதலே, மாநகரின் சில பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. சில பகுதிகளில் பிற்பகல் முதல் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படத்துடன் மேகமும் கருமேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு கடும் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் கொட்டிய கனமழையால், மாநகர சாலைகள் வெள்ளக்காடாக மாறின.



சில பகுதிகளில் பழமையான சுவர்களும், மரங்களும் விழுந்தன. இரவு நேரம் நிகழ்ந்த இச்சம்பவத்தால் பெரும் அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டன. 

இதனிடையே, ஆர்.எஸ்.புரம், டி.பி சாலையில் ஏராளமான பழமையான நாட்டு மரங்கள் உள்ள நிலையில் மழையின் காரணமாக மண் தளர்ந்திருந்ததால் இன்று பிற்பகல் பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே வேருடன் முறிந்து விழுந்தது.



ராஜஸ்தானி அரங்கத்தின் எதிரே, காந்திபார்க்- ஆர்.எஸ்.புரத்தினை இணைக்கும் இந்த முக்கியச் சாலையில் மரம் விழுந்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.



கோவை நகரத்தின் முக்கிய பகுதியான, போக்குவரத்து மிகுந்த ஆர்.எஸ்.புரத்தில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து நீண்ட நேரம் கடந்தும் தொடர்புடைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனவும், விரைந்து மரத்தினை அகற்றி போக்குவரத்தினை சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...