நீலகிரி மாவட்டத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாளுவது குறித்த விழிப்புணர்வு முகாம் - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை வட்டம் மீக்கேரி கிராமத்தில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நேற்று (செப்.,5) தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இதனை தொடங்கி வைத்தார்.

பின்னர், முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பேசுகையில்,  நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி பயிர்கள், பழங்கள், வாசனை திரவிய பயிர்கள், மலர்கள், மூலிகை பயிர்கள் என அனைத்து வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. 

உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை நேரடி உணவாக உட்கொள்வதால், மருந்துகளில் உள்ள இரசாயன பொருட்களின் நச்சுத்தன்மை மனிதர்களுக்கு பல நோய்களை உருவாக்குகின்றன. எனவே, விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறி மற்றும் பழங்களில் அதிக நச்சுத்தன்மை கொண்ட இரசாயன கொல்லிகள், அதிக அளவிலான உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையாக தயாரிக்கப்படும் உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து மகசூலை பெருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், விவசாயிகளுக்கு மண்வள அட்டை மற்றும் பாதுகாப்பு கவசங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை வட்டத்தில் வரும் 07-ம் தேதி குந்தசப்பை பகுதியிலும், 14-ம் தேதி பிக்கட்டி பகுதியிலும், 19-ம் தேதி சோலூர் பகுதியிலும், 21-ம் தேதி இத்தலார் பகுதியிலும், 26- ம் தேதி கடநாடு பகுதிகளிலும்,  குன்னூர் வட்டத்தில் 13-ம் தேதி பிக்கோல் பகுதியிலும், 15-ம் தேதி கெரடா பகுதியிலும், கோத்தகிரி வட்டத்தில் 06-ம் தேதி கூக்கல் பகுதியிலும், 07-ம் தேதி தேனாடு  பகுதியிலும், கூடலூர் வட்டத்தில் 07-ம் தேதி  மாங்குழி பகுதியிலும், 13-ம் தேதி தஞ்ஜோரா பகுதியிலும் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. 

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் (கோவை) இல.பெருமாள் தோட்டக்கலை துணை இயக்குநர் ஜி.கே.உமாராணி, தோட்டக்கலை உதவி இயக்குநர் டி.ஜெ.மீராபாய் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...