சாலை பாதுகாப்பு வாரம் : கோவையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

கோவை : சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஊர் காவல் படையினர் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

கோவை : சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஊர் காவல் படையினர் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 



பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி தொடங்கிய இந்த வாரவிழா வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, இன்று கோவையில் மாநகர காவல்துறை மற்றும் ஊர் காவல் படையினர் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து மாநகரின் முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் காவல் ஆணையாளர் பெரியய்யா மற்றும் துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். 



வ.உ.சி பூங்கா வளாகத்தில் தொடங்கிய இந்த இரு சக்கர வாகன பேரணியானது. அவினாசி சாலை, லட்சுமி மில் வழியாக சென்று காந்திபுரம் வழியாக வந்து மீண்டும் வ.உ.சி பூங்கா வந்தது. பின்னர், நிறைவடைந்தது.

இந்த பேரணி குறித்து மாநகர காவல்துறை துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் கூறுகையில், "‘சாலை விபத்துக்களைத் தடுக்க ஆண்டு தோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சாலை விபத்துகளினால் தனி நபர், குடும்பம், சமுதாயம் என பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே போகிறது. எனவே, வாகன ஓட்டிகள் தனி கவனத்துடன் சாலை விதிகளை கடைப்பிடித்து, விபத்து இல்லாத கோவை மாநகராக மாற்ற முன் வர வேண்டும்." என்றார். 



இந்த நிகழ்ச்சியில், 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...