குடிபோதையில் மாடியில் இருந்து விழுந்த இளம் பைனான்ஸியர் உயிரிழப்பு

காங்கயம் : கோவையில் குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த இளம் பைனான்ஸியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காங்கயம் :  கோவையில் குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த இளம் பைனான்ஸியர் பரிதாபமாக உயிரிழந்தார். 

காங்கயம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (29) கோவை மசக்காளிபாளையம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

வீட்டிற்கு சென்ற அவர், பால்கனி அருகே நின்று கொண்டு இருந்தபோது, போதை தலைக்கேறியதால் நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதனால், தலையில் பலத்த காயம் அடைந்த கோபிநாத்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில், அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே மரணமடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...