இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு : கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை

கோவை : கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்புடைய 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.


கோவை : கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்புடைய 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். 



கோவை மாநகர் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த சசிக்குமார், சுப்பிரமணியபாளையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கை துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

2016-ம் ஆண்டு அப்துல் ஹக்கீம் என்பவர் கிருஷ்ணராஜ் காலணி பகுதியில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குபழியாக சசிக்குமார் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்தக் கொலையில் அமைப்பு ரீதியான பின்னணி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு விசாரணைகள் மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 



கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கைது செய்யப்பட்ட முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர். இதில் அபுதாகிர்,சுபேர் ஆகியோரின் இல்லங்களில் இருந்து மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இந்த நிலையில், சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அதிகாலை 3 மணி முதல் இந்த சோதனையானது நடைபெற்றது. இதில், சுகுணாபுரம் ஹைதர் அலி, பிலால் எஸ்டேட் ஹநீஸ், வெள்ளக்கிணறு முகமது அலி, துடியலூர் சதாம், செல்வபுரம் ஃப்பெபின் ரகுமான் உள்ளிட்ட 5 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ., அமைப்பினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகளில் செல்போன்கள், மெம்மரி கார்டுகள் போன்ற ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அதேபோல, ஹநீஸ் என்பவரது பட்டறையிலும் சோதனை செய்து வருகின்றனர். இதில், அவர் பயன்படுத்தி வந்த செல்போன் மறைக்கபட்டிருந்ததால், அது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். இவரிடம் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதில், ஃப்பெபின் ரகுமான் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் என்.ஐ.ஏ., மேல் புகார் அளித்தார். இந்த நிலையில் இவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Video: Laxman

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...