கோவையில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

கோவை: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று கோவையில் நடத்திய சோதனையில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கோவை: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று கோவையில் நடத்திய சோதனையில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கார்பைடு கல் வைத்து செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ஒன்றாகும். ஆனால், லாப நோக்கில் சில வியாபாரிகள் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து வருகின்றனர். இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் உக்கடம் பேருந்து நிலையம் எதிரே உள்ள பழக்கடைகளில் அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை அழித்தனர்.



இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறுகையில், "உக்கடம் பகுதியில் இன்று 16 பழக்கடைகளில் சோதனை நடத்தியுள்ளோம். இதில் மொத்த வியாபாரம் செய்யும் ஒரு பழக்கடையில் மட்டும் கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்துள்ளோம்.



கோவையில் மாம்பழ வரத்து குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மாம்பழ வரத்து அதிகரிக்கும் நேரத்தில் மீண்டும் இந்த சோதனை நடத்தப்படும். கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்வது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார். 

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...