கடந்த நான்கு நாட்களில் கோவையில் பெய்த மழை அளவு என்ன தெரியுமா?

கோவை: மாநகர பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


கோவை: மாநகர பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கோடை மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து வெப்பம் வாட்டிவதைத்து வந்த சூழ்நிலையில், கடந்து சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. கோவையில் வழக்கமாக பெய்யும் மழையைப் போல் அல்லாமல், பலத்த காற்றுடன் பெய்து வரும் இந்த மழை காரணமாக நகரின் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.



நேற்று பெய்த மழையில் காந்திபுரம் அருகே இருந்த மின் மாற்றி ஒன்றில் லேசான தீ விபத்து ஏற்பட்டது. இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் கனமழை நேரத்தில் மின் தடை செய்யப்படுகிறது.



மழை அளவு

கோவையில் கடந்த நான்கு நாட்களாக பெய்த மழை அளவு விவரம் பின்வருமாறு:-

09/05/18399 mm
10/05/18128 mm
11/05/1870 mm
12/05/1873.4 mm


நேற்று (12-ம் தேதி) மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவின் விவரம் பின்வருமாறு:-

அன்னூர் 9 மி.மீ, பீளமேடு 21.4 மி.மீ, பொள்ளாச்சி 6 மி.மீ, சூலூர் 5.20 மி.மீ, வேளாண் பலகலை., .80 மி.மீ, சின்கோனா 4 மி.மீ, சின்னக்கல்லார் 8 மிமீ., பரம்பிக்குளம் நீர்த் தேக்க பகுதி 12 மி.மீ, வால்பாறை 7 மி.மீ. மாவட்டத்தின் சராசரி அளவாக 6.67 மி.மீ மழை பதிவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 116.20 மி.மீ மழை பெய்துள்ளது.

இந்த நான்கு நாட்களில் மட்டும் கோவை மாவட்டத்தில் 670.4 மி.மீ மழை பெய்துள்ளது. பொதுவாக கோடை காலத்தில் பெய்யும் மழை அளவை விட தற்போது அதிக மழை பெய்துள்ளதாக வேளாண் பல்கலை., அறிவித்தது குறிப்பிடத்தக்கது.









Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...