திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

திருப்பூர் : இயற்கை வளங்களைப் பாதுகாத்து, தமிழகம் பாலைவனம் ஆகாமல் தடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : இயற்கை வளங்களைப் பாதுகாத்து, தமிழகம் பாலைவனம் ஆகாமல் தடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினரை போலீசார் கைது செய்தனர். 



தமிழகத்தில் காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையைத் தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ ஆகிய திட்டங்களை கைவிட வேண்டும், மணல் கொள்ளையினை தடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இளைஞர் பெருமன்றத்தினர் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதனையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்ல முயன்ற போராட்டத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

Newsletter

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...