மாவட்ட ரீதியாக பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் 3-வது இடம்: ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

திருப்பூர்: தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட அளவில் திருப்பூர் 3-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட அளவில் திருப்பூர் 3-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

12-ம் வகுப்புக்கான தேர்வெழுதிய மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தத் தேர்வு முடிவுகளைப் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 3 இடத்தை திருப்பூர் மாவட்டம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 11,114 மாணவர்களும், 13,466 மாணவிகளும் உள்பட மொத்தம் 24,580 பேர் தேர்வெழுதினர். இதில், 10,530 மாணவர்கள், 13, 110 மாணவிகள் உள்பட மொத்தம் 23,640 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.75 சதவீதமும், மாணவிகள் 97.36 சதவீதமும் என சராசரியாக 96.18% ஆகும். கடந்த ஆண்டு பெறப்பட்ட 96.05 % காட்டிலும், 0.13 சதவீதம் அதிகம் பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளை பொருத்த வரை 93.45 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாக தேர்வெழுதி தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறினார்.

மேலும், தேர்வு முடிவுகளை 9.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இருந்த நிலையில், தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் ஒருமணி நேரத்திற்கு பிறகே அறிவித்தது செய்தியாளர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...