கனடாவில் பணிபுரிந்து வந்த சகோதரரைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு


கனடாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தனது சகோதரர் மாயமாகி விட்டதாகவும், இந்திய வெளியுறவுத் துறை மூலம் தனது சகோதரனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோவை சூலூர் பகுதியை சேர்ந்த அவரது தங்கை மற்றும் தந்தை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரோத்தாஸ் சிங் தாலா. டெல்லியை சேர்ந்த இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மாவட்டம் சூலூரில் வசித்து வருகின்றார்.

இவரது இளைய மகன் கார்த்திக் சவுத்ரி (25) மும்பையை சேர்ந்த ஆங்கிலோ ஈஸ்டன் என்ற கப்பல் நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றார்.



இந்நிலையில் பணிநிமித்தமாக கனடா சென்ற கார்திக் சவுத்ரி மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. கடைசியாக டிசம்பர் மாதம் குடும்பத்தினருடன் பேசிய கார்த்திக் சவுத்ரி அதன் பின்னர் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில், இன்று கார்த்திக் சவுத்ரியின் தந்தை ரோத்தாஸ் சிங் மற்றும் அவரது சகோதரி மீனாட்சி ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் தனது சகோதரனை இந்திய வெளியுறவுத்துறை மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்த்திக் சவுத்தியின் சகோதரி மீனாட்சி, தனது சகோதரன் மாயமானது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறைக்கு இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் தனது சகோதரன் குறித்து உரிய தகவல் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், சகோதரன் பணிபுரிந்த நிறுவன ஊழியர்கள் திடீரென இறப்பு சான்றிதழ் தரும்படி கேட்பதாகவும் தெரிவித்த அவர், தனது சகோதரன் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை எனவும் எனவே கனடாவில் மாயமான தனது சகோதரனை இந்திய வெளியுறவுத்துறை மூலம் மீட்க மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...