பத்மஸ்ரீ பாப்பம்மாள் மறைவு: வானதி சீனிவாசன் அஞ்சலி

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது விவசாயி பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அஞ்சலி செலுத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பத்மஸ்ரீ பாப்பம்மாள் நேற்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். 108 வயது வரை தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்த பாப்பம்மாளுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்திருந்தது.

பாப்பம்மாளின் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், பாப்பம்மாளின் குடும்ப உறுப்பினர்களிடம் ஆறுதல் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், "பாப்பம்மாள் பெண்களின் அடையாளமாகவும், கோவையின் அடையாளமாகவும் திகழ்ந்தவர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மதிப்புக்குரியவராக இருந்தார். பிரதமர் அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவார்," என்று கூறினார். பாப்பம்மாளின் ஆத்மா சாந்தியடைய பாஜக சார்பில் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.



பின்னர், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான ஏகே செல்வராஜும் பாப்பம்மாளின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...