பொள்ளாச்சி- தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்- அனைத்து கட்சி முடிவு

பொள்ளாச்சி அகல ரயில் பாதை வழியாக தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்காவிட்டால், தொடர் போராட்டங்கள் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

போத்தனூர்- பொள்ளாச்சி அகல ரயில் பாதைப் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திற்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து, இன்று கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், ரயில் இயக்கப்பாடாததை கண்டித்து வரும் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், அடுத்த கட்டமாக செப்டம்பர் 13-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவதென அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

ரயில்வே நிர்வாகம் ரயில் பெட்டி குறைபாடு என காரணம் கூறுவதால், ரயில் பெட்டி வாங்க பொது மக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என தபெதிக ஒருங்கிணைப்பாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...