வலுக்கிறது மாணவர்கள் போராட்டம்: தீர்வு என்ன ?

கோவையில் ஒரு போராட்டம் நடைபெற்றால், அது மிக விரைவாக தமிழகம் முழுவதும் பரவும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இந்த நிலையில் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிராகவும் கோவையில் போராட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பல்வேறு அமைப்புகள் முன்னெடுத்து நடத்தி வந்த இந்தப் போராட்டங்களை தற்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்  முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

நேற்று மாலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே அனைத்துக் கட்சி மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது காவலர்கள் இளைஞர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். மேலும், ஒரு சிலர் மீது லேசான தாக்குதலையும் காவல்துறையினர் நடத்தினர். அப்பொழுது அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் காவல்துறையினரிடம், 'இளைஞர்களை அடிக்க வேண்டாம்' என்று வலியுறுத்தியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்ணீர் கொடுத்து திடப்படுத்தினர்.

இப்படியாக மக்களின் ஆதரவுடன் கோவையில் தொடங்கிய போராட்டம் நொடிக்கு நொடி உயிர் பெற்று வருகிறது. நேற்று மாலை பல்வேறு கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இன்று காலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோவில்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.



வழக்கறிஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேப்போல், கோவையில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரி மாணவர்களும் நீட் தேர்வு வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காணாவிட்டால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல மீண்டுமொரு போராட்டத்தை தமிழகம் காணும் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பதவிச் சண்டை, உள்ளூர் அரசியல் என்று குழம்பிய குட்டையாக இருக்கும் தமிழக அரசியல் களத்தில் இருந்து, நீட் தேர்வு வேண்டாம் என்று மத்திய அரசை நிர்பந்திக்கும் துணிச்சல் எந்த அமைச்சருக்கு, பாராளுமன்ற உறுப்பினருக்கு உள்ளது என்பதில் ஐயப்பாடு உள்ளது.

மீண்டுமொரு போராட்டக்களத்தை காணும் முன், ஆளும் கட்சியினர் துரிதமாக செயல்பட்டு, கட்சிப் பிரச்சனைகளை ஓரம் கட்டிவிட்டு, நீட் பிரச்சனைக்கு குரல் கொடுத்தால் போராட்டங்கள் ஓயும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...