ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை செலுத்த நிர்பந்திப்பதை தடுத்து நிறுத்தக் கோரிக்கை

கோவை : ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை கட்டசொல்லி நிர்பந்தப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கோவை : ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை கட்டசொல்லி நிர்பந்தப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறியதாவது :- கல்வி உரிமை சட்டத்தை பாதுகாக்கக் கண்காணிப்பு குழு அமைத்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்த வேண்டும். 

தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு தொடர்பான தகவல்களை பதாகைகள் மூலம் வெளியிட வேண்டும். அரசு பள்ளிகள் மூடப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவது மாநில அரசின் கடமையாகும். அத்தொகையை செலுத்துமாறு மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் நிர்பந்திப்பது ஏற்கக்கூடியதல்ல. 

இந்தக் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், அரசும் நிறைவேற்றாத பட்சத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் மற்றும் அமைப்புகளை இணைத்து வலிமையான போராட்டம் முன்னெடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...