பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பொதுமக்களுக்கான தொழில்.முனைவோர் மேம்பாட்டு திட்டப் பயிற்சி வரும் பிப்.16ல் துவக்கம்


பி.எஸ்.ஜி  கலை அறிவியல் கல்லூரி, கோவை எப் ஐ சி சி ஐ மகளிர் அமைப்பு ஆகியவை இணைந்து தொழில் முனைவோர்களுக்கான மேம்பாட்டு திட்டப் பயிற்சியினை வரும் பிப்ரவரி 16ம் தேதி முதல் நடத்தவுள்ளது.

அகமதாபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் இ டி ஐ அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சியானது தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது. என் எஸ் டி இ டி பி, டி எஸ் டி ஆகிய அமைப்புகளும் இந்த திட்டத்திற்கு நிதிவுதவி அளித்துள்ளனர். 

இப்பயிற்சியானது தொழிலை திறம்பட நடத்துவது, நிதி பெரும் திட்டங்கள், தொழிலை தேர்ந்தெடுத்தல் மற்றும் அத்தொழிலின் வளர்ச்சியை அடைதல், தொழில் முனைவோர்களுக்கான திறன், திட்டம் குறித்து அறிக்கை தயாரித்தல், சந்தை குறித்து ஆராய்தல், தொழிலை நிர்வகித்தல் மற்றும் வரி குறித்தான நடைமுறைகள் ஆகியவை குறித்து இப்பயிலறங்கில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி பெற பி.எஸ்சி, பி.டெக், பிஇ பட்டதாரிகள், அரசு அங்கீகாரம் பெற்ற டிப்ளமோவில் 2 மற்றும் 3 வருட பயிற்சி மேற்கொண்டவர்கள் என 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து தரப்பினரும் பங்குபெறலாம்.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் அவர்களது முழு விபரங்களையும் [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9363104733, 9443760648, 9486710231, 9361333111, 9443338935 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...