கோவையில் குடும்ப பிரச்சனை காரணமாக தனது 4 வயது பெண் குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம், செல்வபுரத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக தனது 4 வயது பெண் குழந்தையை கொலை செய்த வழக்கில் குழந்தையின் தாய்க்கு ஆயுள் தண்டணை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை செல்வபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த்குமார். இவரது மனைவி திவ்யா. இத்தம்பதியினருக்கு 4 வயதில் ஹரிவர்ஷா என்ற பெண் குழந்தை இருந்த நிலையில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திவ்யா அவரது தாயார் வீட்டில் தங்கி இருந்து கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.



இந்நிலையில் வீட்டில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டில் இருந்த தனது மகள் ஹரிவர்ஷாவை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கடந்த 03.06.2016 அன்று கொலைசெய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திவ்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த வழக்கு கோவை மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் குழந்தையின் தாய் திவ்யாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் இன்று உத்திரவிட்டார். இதனையடுத்து திவ்யா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...