பென்சனுக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்திடுக - கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்

வருங்கால வைப்புநிதி இபிஎப் பென்சன் விண்ணப்ப கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஒன்றிய அரசின் துறை அமைச்சர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.


கோவை: வருங்கால வைப்புநிதி இபிஎப் பென்சன் விண்ணப்ப கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மத்திய தொழில் மற்றும் ஐவுளி துறை அமைச்சர்களுக்கு தனித்தனியாக எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, 3.03.2023 அன்றைய தேதியின் அடிப்படையில் அதிக பிஎப் ஓய்வூதியத்திற்கான உரிமைகோரல் படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதியை நீட்டிக்குமாறு 25,000க்கும் மேற்பட்ட ஜவுளி, பிற தொழில்துறை தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதி சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

இவர்களில், பெரும்பாலான ஓய்வூதியதாரர்கள் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள். உடனடியாக தகவல் அறிய இயலாத நிலை உள்ளது. ஆகவே இந்த செய்தி இபிஎப்அமைப்புகளின் மூலம் அவர்களை சென்றடைய கூடுதல் கால அவகாசம் வேண்டும்.

எனவே, அதிக பிஎப் ஓய்வூதியக் கோரிக்கை படிவங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பது பற்றிய தகவலறியாத விபரங்கள்இல்லாத இபிஎப் சந்தாதாரர்களால், செயல்முறையை குறுகிய காலத்தில் முடிக்க முடியாது. மேலும், இபிஎப் ஓய்வூதியம் பெறுவோர் மிகவும் சிரமத்தில் இருப்பவர்களாக உள்ளனர்.

ஆகவே, தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மேலும், சங்கங்களின் கூட்டு அறிக்கையை இபிஎப்ஓ இணையதளத்தில் பதிவேற்றலாம். தாங்களும் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பின் மூலமாக விண்ணப்பங்களைசமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...