வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளின் வருவாய் அதிகரிப்பு - அமைச்சர் மூர்த்தி தகவல்

தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


சென்னை: தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளின் வருவாய் அதிகரித்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகவரித்துறையில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக வணிகவரி வசூல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வணிகவரித்துறையில் நடப்பு நிதியாண்டில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வரையிலான மொத்த வருவாய் 1,17458.96கோடி ரூபாய் ஆகும்.

கடந்த ஆண்டின் இதே நாளில் இத்துறையின் வருவாய் 92,931.57 கோடி ரூபாயாக இருந்தது. இவ்வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் இதே நாளில் 24,527.39 கோடி ரூபாயை வணிகத்துறை அதிகமாக ஈட்டியுள்ளது.

இதேபோன்று பதிவுத் துறையில் ஆவணங்கள் பதிவின் மூலம் பெறப்படும் வருவாய் நடப்பு ஆண்டில் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. நடப்பு ஆண்டில் கடந்த பிப்.28ஆம் தேதி வரை பதிவுத்துறையில் வசூலிக்கப்பட்ட 15,684.83 கோடி ரூபாய் ஆகும். கடந்த வருடம் இதே நாளில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் 12,161.51 கோடி ரூபாயை விட 3,523.32 கோடி ரூபாய் அதிகமாக நடப்பு நிதியாண்டில் பதிவுத்துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளினாலும், தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஆய்வுக் கூட்டங்களினாலும் இத்துறையில் வருவாய் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...