தாராபுரம் அருகே ஆச்சியூரில் ஆடு திருடிய தொழிலாளி கைது – போலீசார் நடவடிக்கை

மாலையில் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்து விட்டு காலையில் பட்டியை திறந்தபோது, ஒரு ஆடு குறைந்து இருந்ததை கண்டு விவசாயி அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான புகாரின்பேரில், பெரிச்சிபாளையம் கல்லுத்துறை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே ஆச்சியூரை சேர்ந்த விவசாயி கார்த்திக் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் ஆடுகளை பட்டியில் இருந்து மேய்ச்சலுக்காக அனுப்பி வைத்தார். பின்னர் மாலையில் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்து விட்டு நேற்று காலையில் பட்டியை திறந்தார். அப்போது ஒரு ஆடு குறைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடியதாக பழனி தாலுகா பெரிச்சிபாளையம் கல்லுத்துறை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (வயது 52) என்பவரை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...