கவுண்டம்பாளையத்தில் 830 ஓட்டுகள் காணவில்லை - மறுவாக்கு பதிவு நடத்தக்கோரி பாஜகவினர் போராட்டம்

கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அங்கப்பா பள்ளியில் பூத் எண் 214 ல், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 1353 ஓட்டுக்கள் இருந்த நிலையில் தற்போது வெறும் 523 ஓட்டுக்களே உள்ளன. இதனைக்கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட 22 க்கும் மேற்பட்ட கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அதன் கட்சித் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.



இந்த நிலையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அங்கப்பா பள்ளியில் பூத் எண் 214 ல் 1353 ஓட்டு உள்ளது.



கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 1353 ஓட்டுக்கள் இருந்த நிலையில் தற்போது வெறும் 523 ஓட்டுக்கள் உள்ளன. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டனர். மேலும் இது ஒவ்வோரு வாக்காளர் எண்ணையும் மொபைலில் ஐ.டி யை வைத்து செக் பண்ணும் போது அதில் அந்த எண்கள் இல்லை என்றே வருகிறது என்று அதிகாரிகளிடம் கூறி உள்ளனர்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பா.ஜ.க வினர் சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக கூறினர். பின்னர் ஒரு மணி நேரமாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இதனால் பா.ஜ.க வினர் தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ நேரில் வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தை முடிவில் ஓட்டு போட அனுமதி மறுக்கப்பட்டவர்கள் அனைவரும் புகார் மனு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கொடுத்து இந்த பூத்தில் மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...