திருப்பூரில் கழிவுநீர் இறக்கிவிட பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் - கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு

கோவை, சேலம் மாநகராட்சிகளில் உள்ளது போல திருப்பூருக்கும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தரக்கோரி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் சுமார் 60 கழிவுநீர் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 150 குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தங்கள் வாகனங்களில் ஏற்றும் கழிவு நீரை விவசாய நிலங்களில் உரமாக இறக்கி விட்டு வருகின்றனர். அவ்வப்போது இப்படி விடப்படும் கழிவுநீரால் பொதுமக்களுக்கும் இவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.



இதன் காரணமாக கோவை, சேலம் போன்ற மாநகராட்சிகளில் செயல்பட்டு வரும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போல, கழிவுநீர் இறக்கி விடுவதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...